கணவன் வேலைக்கே செல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தரணும்..!! உயர்நீதிமன்ற்ம பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

divorce1

விவாகரத்து வழக்குகளில், மனைவியின் விருப்பத்திற்கேற்ப கணவர்கள் ஜீவனாம்சம் வழங்க வேண்டியது கட்டாயம். இந்தப் பணம் மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் கூட வழங்கப்படலாம். இந்நிலையில், கணவனுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கணவன், தனது மனைவி மாதம் ரூ.12,000 சம்பாதிப்பதாகவும், தான் வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறி, ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று மனு தாக்கல் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.

உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஒரு மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது கணவனின் தார்மீகப் பொறுப்பு. கணவனுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது ஒரு சமூக, சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்றம் அந்த கணவன், தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.4,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, அந்த கணவர் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : மளிகை கடைக்குள் மனைவி..!! கூடவே கள்ளக்காதலன்..!! திடீரென கேட்ட முனகல் சத்தம்..!! நேரில் பார்த்த கணவன்..!! அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்..!!

CHELLA

Next Post

அச்சுறுத்தும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. கேரளாவில் 19 பேர் பலி! எப்படி பாதுகாப்பாக இருப்பது?

Wed Sep 17 , 2025
அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட மூளைத் தொற்று நோயான முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோயின் பாதிப்புகள் கேரளாவில் அதிகரித்துள்ளது.. இதையடுத்து கேரள சுகாதார அதிகாரிகள் உள்ளனர். இந்த தொற்று ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, கேரளாவில் 61 பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகி உள்ளது.. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், […]
brain eating amoeba

You May Like