Breaking : கொஞ்சம் அசந்தாலும் ஓட்டுரிமை பறிபோகும்.. Gen Z படை பலமே உஷாரா இருங்க.. வீடியோ வெளியிட்டு விஜய் எச்சரிக்கை..

vijay 1

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசசன் நமக்கு அளித்த முதல் உரிமை.. வாக்களிப்பது என்பது உரிமை இல்லை.. அது தான் வாழ்க்கை.. SIR மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது.. BLO-க்கள் யார் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. ஒரே மாத்தில் SIR கணக்கீட்டு படிவங்களை விநியோகம் செய்வது எப்படி?


தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டுப்போடும் உரிமை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம்.. நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது ஓட்டுரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. நான் பயமுறுத்தவில்லை.. இதுதான் உண்மை.. கொஞ்சம் அசந்தாலும் லட்சக்கணக்கானோருக்கு ஓட்டு போடும் உரிமை பறிபோகும்.. வரும் சட்டமன்ற தேர்தலில் Gen Z வாக்காளர்கள் தான் மிகப்பெரிய சக்தியாக இருக்கப் போகிறீர்கள்.. எனவே நீங்கள் கவனமாக அந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்..

வாக்குரிமை உள்ளவர்கள் ஏன் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.. SIR பணிகளுக்கு ஊழியர்கள் வரும் போது வீடு பூட்டியிருந்தால், அவர்களின் வாக்குகள் பறிபோகும் நிலை ஏற்படலாம்.. சில மீட்டிங்கில் இரண்டே பேருக்கு தான் போட்டி என்று நான் கூறி வருகிறேன்.. அதை ஒவ்வொரு மேடையில் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.. வரப்போகும் நாம் யார் நமது பலத்தை காட்ட வேண்டும்.. அதற்காக பலமான ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும்.. அது வேறு எதுவும் இல்லை அது ஓட்டு தான்.. தமிழ்நாடே வாக்குச்சாவடியில் திரண்டு நிற்க வேண்டும்.. தமிழ்நாடு தமிழக வெற்றிக் கழகமா அல்லது தமிழக வெற்றிக்கழகம் தான் தமிழ்நாடா என்று யோசிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.. ஓட்டு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். மை டியர் Gen Z படை பலமே உஷாராக இருங்கள்.. நம்பிக்கை உடன் இருங்கள்.. வெற்றி நிச்சயம்ம்ம்ம்.. ” என்று தெரிவித்தார்..

Read More : “இன்னும் 5 மாதங்கள் தான் முதல்வரே.. தமிழகம் இனி பொறுத்துகொள்ளாது..” வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கண்டனம்..”

RUPA

Next Post

AI-ஐ பயன்படுத்தினால் சிந்திக்கும் திறன் மோசமாகுமா? அல்லது மேம்படுமா? இதுதான் உண்மை!

Sat Nov 15 , 2025
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது மாணவர்கள் கற்றுக்கொள்ளும் விதம், அவர்கள் வேலை செய்யும் விதம் மற்றும் தகவல்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றுகிறது. AI இன் புதிய திறன்கள் குறித்து சமூகத்தில் மிகுந்த உற்சாகமும் விவாதமும் இருந்தாலும், வரலாறு நமக்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. கடந்த காலத்தில் ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் – விவசாயம், நீராவி இயந்திரம், கணினி, மைக்ரோசிப் – முதலில் […]
ai nn

You May Like