மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புர்ஹான்பூரைச் சேர்ந்த நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர், கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று நள்ளிரவில் கக்னர் சமூகச் சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் சடலத்தை அவர் இழுத்துச் சென்று, சிசிடிவி கேமராவில் பதிவாகாத ஒரு மூலையில் வைத்து வன்புணர்வுக்கு உள்ளாக்கியது பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, சமீபத்தில் அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலானது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.
இதைத் தொடர்ந்து, மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கடந்த அக்.7ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நீலேஷ் பில்லாலாவைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More : தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் போனால் போதும்..!! கொலஸ்ட்ரால் டக்குனு குறையும்.. மாரடைப்பே வராது..!!