விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரஹமதுல்லா (வயது 26) என்பவர் கார் விற்பனை முகவராக தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி சஹானா (24) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சமீப காலமாக கூனிமேடு கிராமத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
அப்போது, சஹானாவுக்கும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் ரஹமதுல்லாவுக்கு தெரிந்ததும், அவர் நேரில் சாதிக் பாஷாவை எச்சரித்தும், தனது மனைவியுடனான உறவை கைவிடுமாறும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த எச்சரிக்கைக்கு அஞ்சாமல் அவர் கள்ள உறவை தொடர்ந்து வந்துள்ளார். மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சாதிக் பாஷாவை அழைத்து, சில ஊர் தலைவர்கள் கடுமையாக சதிர்த்து அனுப்பியிருந்தனர். இதையடுத்து, ரஹமதுல்லா தனது குடும்பத்துடன் கூனிமேட்டிலிருந்து வெளியேறி, சொந்த ஊரான முருங்கப்பாக்கத்திற்கே சென்றார்.
இருப்பினும், சாதிக் பாஷா தனது செல்போன் மூலம் சஹானாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஹமதுல்லா, அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடற்கரைக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்த சாதிக் பாஷா மீது ரஹமதுல்லா மற்றும் கூலிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது, சாதிக் பாஷாவின் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஹமதுல்லாவை கைது செய்த போலீசார், அவரது வாக்குமூலத்தின் பேரில், கூலிப்படையை சேர்ந்த பாரதிதாசன் (28), ஆனந்தராஜ் (21), குணசேகரன் (22), மற்றும் செல்வகுமார் (23) ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.