மத்தியப் பிரதேச மநிலம் போபால் பகுதியில் இரண்டு சகோதரர்கள் தங்கள் அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது கணவரின் உடல்நலம் சரியாவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி, அவரது சகோதரர்கள் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.
கணவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே சென்றிருந்தபோது, இரவு நேரங்களில் அவர்கள் என்னுடைய அறைக்குள் நுழைந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை எதிர்த்தபோது, குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டினர். இந்த கொடுமைகள் ஜனவரி முதல் மே மாதம் வரை தொடர்ந்து நடந்தது.
இதையடுத்து, பயந்துபோன அந்தப் பெண், தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்தபோது, அவர் நம்ப மறுத்ததுடன், அவரையே தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களுடன் இது குறித்து பேச முயன்றும், யாரும் உதவ முன்வராததால், காவல்துறையை நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போபால் காவல்துறையினர் விசாரணை நடத்தி சகோதரர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.