சிறுநீரக செயலிழப்பால் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து நடிகர் பொன்னம்பலம் மனம் திறந்து பேசி உள்ளார்
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்ல நடிகராக மிரட்டியவர் பொன்னம்பலம்.. ரஜினி உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களுடன் இணைந்து தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.. இது தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அப்போது “ எல்லாம் இயற்கை, கர்மான்னு சொல்வாங்க.. நடக்கிறது நடக்கும்.. பொற்ந்த உடனே எதையுமே எதிர்பார்க்கல.. வளர்ந்த விதம் வேற.. படிச்ச விதம் வேற.. வேலை செஞ்ச விதம் வேற.. அதுக்கு அப்புறம் மாற்றங்களாகி வருகிறது..
சந்தோஷமாக இருந்த காலங்களில் சந்தோஷமாக தான் இருந்தே.. அமிதாப் பச்சன கூட என்னை மாதிரி அனுபவிச்சிருக்க மாட்டாரு.. காரணம் என்னன்னா… அவரு ஒரு கூடு மாதிரி.. ஆனா நான் ஃப்ரீ பேர்டு.. 3 தலைமுறைக்கு என்னென்ன அனுபவிப்பாங்களோ அதை நான் இப்பவே அனுபவிச்சுட்டேன்.
சினிமாவில் நல்ல மரியாதை.. நல்ல சாப்பாடு.. நல்ல ஆரோக்கியமான உடல். நல்ல உறக்கம் பேரும் புகழும்.. இந்த ஐந்தும் கிடைத்தாலே பெரிய விஷயம்.. அதுவும் குறுகிய காலத்தில் கிடைத்தது.. பொன்னம்பலம், கபாலி என்ற 2 பேரு எனக்கு இருக்கு.. நான் இறந்தா கூட என் பேரை சொல்ற அளவுல இருக்கு..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சிறுநீரக செயலிழப்பு குறித்தும் அவர் பேசினார்.. “ இந்த உலகத்துலேயே மிகக் கொடுமையான தண்டனை.. எதிராளிக்கு கூட வரக்கூடாதுன்னா அது டயக்னோசிஸ் பண்றது தான்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் 2 இன்க்ஷன்.. பிளட் எல்லாம் எடுத்துடுவாங்க.. 750 தடவை நானே ஊசி குத்திருக்கேன்.. அதுவும் ஒரே இடத்துல.. கிட்டத்தட்ட 4 வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கேன்..
உப்பு, கீரை வடை, தக்களி, உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க.. நல்லா சாப்பிட்டு பழகுனவன் கிட்னி ஃபெயிலியர் ஆனா செத்துப்போயிடலாம்.” என்று தெரிவித்தார்.
மேலு “ இப்போ கிட்னி நல்லா ஆகிடுச்சு.. எல்லாம் சாப்பிடலாம்.. அந்த ஸ்டேஜ்ல தான் இருக்கேன்.. ஆனால் ஒரு அளவு தான் சாப்பிடணும்.. சாவு வரும் முன்பு ஹால்பிட்டலுக்கு போகக்கூடாது.. ஆண்டவன் ரெண்டும் படைச்சிருக்கான்.. நல்லது .. கெட்டது. எதுவுமே அளவோடு இருந்தால் நல்லது..” என்று கூறிய அவரின் வார்த்தகள் வாழ்வின் தத்துவார்த்த சிந்தனையையும் காட்டுவதாக உள்ளது..
Read More : கெட்ட கனவுகளை காணும் நபர்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்பு அதிகம்..! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..