‘இயற்கை கூட கேலி செய்கிறது’!. வாகா எல்லையில் வெள்ளம் சூழ்ந்த பாகிஸ்தான் பகுதி!. வீடியோ வைரல்!. நெட்டிசன்கள் கிண்டல்!

Flooded Pakistan Side Of Wagah Border 11zon

பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வாகா-அட்டாரி எல்லையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே எதிர்வினையை தூண்டியுள்ளது.


சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், வாகா எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடக்கும் தினசரி தேசிய கொடி இறக்கும் விழாவின் போது, பாகிஸ்தான் பக்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் இந்தியா பக்கம் நன்கு சுத்தமாகவும், அமைதியாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் மற்றும் விமர்சன பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில், பாகிஸ்தான் ரேஞ்சர்கள், கணுக்கால் அளவு தண்ணீரில் நின்றபடி, வழக்கமான அணிவகுப்பு மற்றும் விழா நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். சுற்றிலும் மணல் மூட்டைகள், குப்பைகள், மற்றும் வெள்ளநீர் காணப்படுகிறது. இந்த நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியப் பக்கம் ஒழுங்காகவும், வறண்டதாகவும், நன்கு பராமரிக்கப்பட்டதாகவும் இருந்தது.

வாகா எல்லை வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்கள் ஒரு பழைய மற்றும் சர்ச்சையான உரையை மீண்டும் நினைவுகூர்ந்தனர். அதாவது, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் சமீபத்தில், “இந்தியா ஒரு மின்னும் மெர்சிடீஸ் கார் போல இருக்கிறது. பாகிஸ்தான் ஒரு துணிகள் நிறைந்த குப்பை லாரி (dump truck full of gravel) போல இருக்கிறது என்று கூறியிருந்தார். அவர் நாட்டின் நிதி மற்றும் நிர்வாக நிலையை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

‘இது அட்டாரி-வாகா எல்லை. ஒரு பக்கம் பிரகாசிக்கும் மெர்சிடிஸ், மறுபுறம் டம்ப் டிரக். இயற்கை கூட பாகிஸ்தானை கேலி செய்கிறது’ என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். வாகாவில், இந்திய பக்கம் முன்னேற்றத்தையும் கட்டமைப்பையும் காட்டுகிறது. பாகிஸ்தான் பக்கம் ரேஞ்சர்கள் வெள்ளத்தில் நனைந்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார்கள்.”“இது ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் . திட்டமிட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும், பிழைசெய்த நிர்வாகம் எப்படி தோற்றமளிக்கிறது என்று பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவை குற்றம்சாட்டும் பாகிஸ்தான்: இந்தியப் பக்கத்தில் உள்ள கிராண்ட் டிரங்க் சாலையின் உயரத்தை மேற்கோள் காட்டி, தண்ணீர் தேங்குவதற்கு இந்தியாவை பாகிஸ்தான் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, இஸ்லாமாபாத் முன்னதாக இந்திய அதிகாரிகளிடம் இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தது.ஆகஸ்ட் 8-9 தேதிகளில் இப்பகுதியில் கனமழை பெய்ததாகவும், அந்த வீடியோ அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் பிஎஸ்எஃப் ஐஜி (பஞ்சாப் எல்லைப்புறம்) அதுல் ஃபுல்செல் தெளிவுபடுத்தினார். ‘கொடியேற்ற விழாவின் மூன்று தளங்களான அட்டாரி, ஹுசைனிவாலா மற்றும் சத்கி ஆகிய இடங்களில் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை’ என்று அவர் வலியுறுத்தினார்.

Readmore: ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை ஏன் அறைந்தார்?. 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான வீடியோ வைரல்!. இதை பகிர்ந்தது யார் தெரியுமா?.

KOKILA

Next Post

60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...!

Sat Aug 30 , 2025
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு […]
Cyclone 2025 1

You May Like