மனித வாழ்வில் எதிர்பாராதவிதமாக தோல்விகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனஅமைதி கெடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். இது பல நேரங்களில் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாக இருக்கலாம். இந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும்போது, அவற்றின் இடத்தை நேர்மறை ஆற்றல்கள் கைப்பற்றும். நேர்மறையான அதிர்வலைகள் அதிகரிக்கும்போது, நாம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கும். பண வரவுக்கு தடைகள் குறையும், கடன் சுமைகள் குறையும்.
விரதம் : ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் உதய சூரியன் உதிக்கும் முன்பே குளித்துவிட்டு அரிசி, குங்குகம், சிவப்பு நிற பூக்கள் மற்றும் பழங்களை வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜை முடிந்தவுடன் ஏதேனும் ஒரு இனிப்பை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். குறிப்பாக, அன்று சாப்பாட்டை தவிர்த்துவிட்டு, மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், வீட்டில் பிரச்சனைகள் குறைந்து, செல்வம் பெருகும். குறிப்பாக தீராத கடன் பிரச்சனையும் தீரும்.
கிராம்பு பரிகாரம் : இந்த பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் மிகவும் முக்கியம். ராகுகாலம் மற்றும் எமகண்டம் தவிர்த்து, ஏதாவது சாதகமான நேரத்தில் இது செய்யப்பட வேண்டும். பரிகாரம் செய்யும் நாளில், அதற்கு முன்பாகவே செய்வது சிறந்தது. அதாவது, அசைவம் உண்பதற்கு முன்பே இதைச் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு தேவை.
ஒரு சிறிய அகல் விளக்கில் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்துடன் ஐந்து கிராம்புகளை சேர்த்து அது முழுமையாக எரியும் வரை எரிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வீட்டின் மைய பகுதியில், சமையலறையில் அல்லது பணம் வைக்கப்படும் இடங்களில் செய்யலாம். பரிகாரம் எரிந்து முடிந்த பின் அந்த புகையை வீட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பரப்ப வேண்டும். குறிப்பாக பணம் வைக்கப்படும் இடங்களில் இந்த புகை சென்றடைந்தால், அந்த இடத்தில் நிலவி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அகலும் என நம்பப்படுகிறது.
பச்சை கற்பூரமும் கிராம்பும் மகாலட்சுமிக்கு பிரியமானவை என்ற நம்பிக்கையோடு இந்த பரிகாரம் பரவலாகச் செய்யப்படுகிறது. இவை வாசனையால் நேர்மறை அலைகளை ஈர்க்கும் சக்தி கொண்டவை. அதனால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதன் விளைவாக செல்வ பாக்கியம், பணவரவு, கடன் நிவாரணம் போன்ற பலன்கள் தானாகவே வந்து சேரும்.
தொடர்ச்சியாக, குறிப்பிட்ட நாள்களில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், நம் வாழ்வில் விரும்பத்தகாத ஆற்றல்களைக் குறைத்து, நம்மை செல்வம், அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்பதை ஆன்மீக நம்பிக்கைகள் வலியுறுத்துகின்றன. கடின உழைப்புடன் இணைந்து இதுபோன்ற ஆன்மீக பரிகாரங்கள் மேற்கொள்ளப்படும்போது, அதன் பலன்கள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
Read More : தவெக கொடியை ஏந்தி விஜய்க்கு ஆதரவு கொடுத்த பவன் கல்யாண்..!! உண்மை என்ன..? வைரலாகும் வீடியோ..!!