2026 தேர்தலில் விஜய் கூட ஜெயிக்க மாட்டாரு என்று தவெக முன்னாள் செய்தித்தொடர்பாள் ஜெகதீஸ்வர் கடுமையாக விமரிச்த்துள்ளார்.
தவெகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜெகதீஸ்வரன் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இந்த சூழலில் பிரபல யூ டியூப் சேனல்களுக்கு அவர் பேட்டியளித்து வருகிறார்.. தவெகவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் பேசி அவருகிறார். அந்த வகையில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் விஜய் கூட தேர்தலில் ஜெயிக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
அதில் பேசிய அவர் “ களத்திற்கு விஜய் எப்போது வருவார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.. ஒருபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மக்களை சந்திக்கிறார். மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. இந்த சூழலில் விஜய்யும் களத்திற்கு வர வேண்டிய நிலை இருந்தது..
அந்த வகையில் சமீபத்தில் லாக் அப் மரணத்திற்கு எதிரான தவெகவின் போராட்டம் வரவேற்கத்தக்கது.. விஜய்யின் பேச்சில் திமுகவை விமர்சித்து பேசியது நல்ல தொடக்கம்.. விஜய் களத்திற்கு வந்துள்ளார்.. 1 மணி நேரம் விஜய் ஏதாவது பயங்கரமாக பேசுவார் என்று எதிர்பார்த்தோம்.. ஆனால் வெறும் 3 நிமிடங்களில் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.. இவ்வளவு கம்மி நேரம் பேசுவதற்கு எதற்கு போராட்டம்.. தொடர்ந்து செய்திகளில் விஜய் வரப்போகிறார் என்ற பில்டப் எல்லாம்..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு தெரிந்த வரை விஜய் செய்தியாளர்களை சந்திக்க தயாராக இல்லை.. அப்படி சந்தித்தால் அவர் பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்.. எல்லா கேள்விகளுக்குமான பதில் விஜய்யிடம் இல்லை.. எந்த ஒரு விஷயம் நடந்தாலும் சீமான் உடனே செய்தியாளர்களை சந்திப்பார்.. விஜய் எல்லா பிரச்சனைகளையும் கவனிக்கிறாரா என்பது தெரியவில்லை..
ஒரு அரசியல் தலைவர் என்பது சாதாரண விஷயம் இல்லை.. அதற்கு 24 மணி நேரமும் ஆக்டிவாக இருக்க வேண்டும்.. தூக்கமில்லாமல் வேலை செய்ய வேண்டும்.. அந்தளவுக்கு ஒரு தலைவராக விஜய் வந்துவிட்டாரா என்றால் இல்லவே இல்லை.. அதற்கு அவர் தயராக இருக்கிறாரா என்பதே தெரியவில்லை..
தவெக தொண்டர்கள் தேர்தலை ஒரு திரைப்படமாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது திரைப்படம் இல்லை.. இந்த மனநிலையில் இருந்து அவர்கள் வெளியே வர வேண்டும்.. 8 மாதங்களில் தேர்தலை வைத்துக் கொண்டு இன்னும் மாவட்ட செயலாளர்களையே போடாமல் உள்ளனர். 6 தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் கிடையது.. ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் என யாரையும் அறிவிக்கவே இல்லை.. முழு கட்டமைப்புக்கே தயாராக இல்லை என்றால், எப்படி அரியணையில் ஏறுவீர்கள்..?
இன்றைய தேதியில், தவெகவில் விஜய் கூட தேர்தலில் ஜெயிக்க மாட்டார்.. இது தான் நிதர்சனமான உண்மை.. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.. விஜய்க்கும் இது தெரிந்த காரணத்தினால் தான் மீண்டும், மீண்டும் ஏதாவது கூட்டணியில் இணைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. கட்சி தொடங்கி நாளில் இருந்து ஏதாவது கூட்டணிக்கு போய்விடலாம் என்பதே அவர்களின் எண்ணம்.. ஆனால் வெளியில் சொல்லும் போது விஜய் முதலமைச்சர் வேட்பாளர், தவெக முதன்மை சக்தி என்று பேசுவார்கள்.. 234 தொகுதிகளிலும் நிறுத்த வேட்பாளர்கள் இருக்கிறார்களா? அதுவே இல்லாத போது எப்படி ஆட்சி அமைத்து அரியணையில் உட்கார முடியும்..
அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல், அதை கற்றுக்கொள்ள தயாராக இல்லாமல், அரசியல் பிரச்சனைகளை பேசாமல், எந்த முன்னெடுப்புகளையும் செய்யாமல், செயல்திட்டங்களை உருவாக்காமல் நாங்கள் திமுகவை திட்டிவிட்டோம், நாங்கள் ஜெயித்து விடுவோம் என்றால் யாராலும் ஜெயிக்க முடியாது. திமுகவை திட்டினால் மட்டும் எப்படி ஓட்டுப்போடுவார்கள்? திமுகவை அழிப்பதற்காக கட்சி தொடங்கப்பட்டது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் பாஜகவும் நாங்களும் அதை செய்யப்போகிறோம் என்று கூறுவார்கள்..” என்று தெரிவித்தார்..
Read More : #Flash : மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு.. தேதியை அறிவித்தார் விஜய்..