எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போதைய கதைக்களத்தை பொறுத்தவரை தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள்.
ரீசண்ட் எபிசோடில், வீடியோ மேன், அறிவுக்கரசியை தனியாகப் பேச அழைக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அறிவுக்கரசி, “யாருக்கிட்ட தனியா பேசணும்னு சொல்ற? நான் யார்னு தெரியுமா?” என்று கோபமாக அடிக்கப் பாய்கிறார். உடனே வீடியோ மேன், குணசேகரன் ஈஸ்வரியை கொலை செய்ய முயன்ற வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறுகிறான். அதிர்ச்சியடைந்த அறிவுக்கரசி அமைதியாகி, அந்த வீடியோ மேனை தனியாக சந்திக்கிறாள்.
அப்போது அறிவுக்கரசி, “டேய் யார மிரட்டுற? என குரலை உயர்த்தி எச்சரிக்கிறார். பின்னர் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை நேரடியாக காட்டுகிறார். அதைப் பார்த்த அறிவுக்கரசி அதிர்ச்சியடைந்து, “அந்த போனை என்னிடம் கொடு” என்று கோருகிறார்.
ஆனால் வீடியோ மேன், “எனக்கு தேவையான பணத்தை கொடுத்துவிட்டால் வீடியோ உங்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுவேன்” என்று கூறுகிறான். இதற்கு அறிவுக்கரசி, “இப்போ இதைப் பற்றி பேசவேண்டாம், கல்யாணம் முடிந்தபின் பார்த்துக்கொள்ளலாம்” என்கிறாள். உடனே வீடியோ மேன், “அது முடியாது. காலையில் திருமணம் நடப்பதற்குள் பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டுகிறான்.
இந்நிலையில், ஜனனி, பார்கவி, ஜீவானந்தம் மூவரும் வெளியில் ரவுடிகள் சூழ்ந்ததால் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிக்கிறார்கள். ஜீவானந்தம், “நாம் வந்த காரில் போனால் பின் தொடர்ந்து வருவார்கள். டாக்டரின் கார் தெருவில் இருக்கிறது, அவர் சாவியையும் காரிலேயே வைக்கிறேன் என்றார். அதைப் பயன்படுத்தி தப்பிக்கலாம். ஆனால் தாமதமாகிவிட்டால், தர்ஷனை மண்டபத்திலிருந்து வெளியே வரச் சொல்லுங்கள்” என்கிறார். இதற்காக ஜனனி, சக்திக்கு போன் செய்து, “நாங்கள் வருவதற்கு தாமதமாகிவிட்டால் தர்ஷனை எப்படியாவது நாங்கள் சொல்வதற்கான இடத்துக்கு அழைத்துவா” என்கிறாள். இந்த சிக்கல்களுக்கு இடையே தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.



