டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் மொபைல் போன்களில் கண்டறியப்பட்ட டெலிகிராம் உரையாடல்களின் மூலம் “ஜெய்ஷ்-இ-மொஹம்மது தொடர்பு” இருப்பது உறுதியானது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடிப்பின் தன்மையைப் பார்த்தால், போலீசார் பரிதாபாத் தீவிரவாத குழுவை சுற்றிவளைத்த நிலையில், அச்சத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவத்தின் முக்கிய தகவல்கள்
கார் வெடிப்பு சம்பவத்துக்கு எதிராக ஏற்கனவே UAPA சட்டம், தீவிரவாதம் மற்றும் வெடிமருந்து சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடிப்பை “தீவிரவாதச் சம்பவம்” என உறுதிப்படுத்தி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
அரசு வெளியிட்ட அறிக்கையில், “2025 நவம்பர் 10 மாலை செங்கோட்டை அருகே கார் வெடிப்பின் மூலம் நாட்டின் எதிரிகள் நடத்திய அருவருப்பான தீவிரவாதத் தாக்குதலை நாடு கண்டுள்ளது. அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் ‘பூஜ்ய சகிப்பு கொள்கை’ உறுதியாக தொடரும்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை பாதுகாப்புக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்ட வெடிப்பா? அல்லது பதட்டத்தில் ஏற்பட்டதா?
விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதிகாரிகள் வெடிப்பின் அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். இது ஒரு முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதலா, அல்லது தீவிரவாதிகள் பதட்டத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்களா, அல்லது கோளாறு காரணமாக தவறுதலாக வெடித்ததா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்விகள்.
இந்த வெடிப்பு, பரிதாபாத் பகுதியில் தீவிரவாத குழு ஒன்றை போலீசார் முறியடித்ததையடுத்து ஏற்பட்ட பதட்டத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
விசாரணையில் மேலும், முக்கிய குற்றவாளி டாக்டர் உமர், பரிதாபாத் வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.. அவரை அந்த குழுவின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் தொடர்பு உறுதி – டெலிகிராம் அரட்டைகள் முக்கிய சான்று
பரிதாபாத் தீவிரவாத குழுவை கைது செய்த பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார், உயர் கல்வியுடன் தீவிரவாத சிந்தனையால் பாதிக்கப்பட்டவர்களின் வலையமைப்பை கண்டுபிடித்தனர். இந்த குழுவினருக்கு எல்லை கடந்த பகுதியில் இருந்து நேரடியாக உத்தரவுகள் வந்திருக்கலாம் எனவும், அவர்கள் தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed)-இன் கிளையுடன் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், டெலிகிராம் அரட்டைகள் (Telegram chats) மூலம், இந்த தீவிரவாத வலையமைப்பின் உள்நிலை தொடர்புகள் மற்றும் உத்தரவுகள் பற்றிய முக்கிய சான்றுகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
டெலிகிராமில் ஜெய்ஷ் தீவிரவாதிகளுடன் தொடர்பு
டாக்டர் முஸம்மில் கனாய் (Dr. Muzammil Ganai) கைது செய்யப்பட்டதையடுத்து, போலீசார் அவரின் டெலிகிராம் (Telegram) அரட்டைகளில் இருந்து ஜெய்ஷ் தீவிரவாத குழுவின் வழிநடத்துநர்களுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஒரு மூத்த அதிகாரி இதுகுறித்து பேசிய போது “ கைது செய்யப்பட்டவர்களின் டிஜிட்டல் சாதனங்களை ஆரம்பமாக ஆய்வு செய்ததில், அவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் தீவிரவாத வழிநடத்துநர்களுடன் டெலிகிராம் மூலம் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
இந்த புதிய தகவல், டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கில் பாகிஸ்தானின் நேரடி தொடர்பு இருப்பதற்கான முக்கிய சான்றாக கருதப்படுகிறது.
துருக்கி பயணம் உறுதி:
டெல்லி வெடிப்பு வழக்கைச் சுற்றி நடைபெறும் விசாரணையில், அதிகாரிகள் ஒரு முக்கிய தகவலை உறுதி செய்துள்ளனர்.. 35 வயதான டாக்டர் உமர் நபி மற்றும் அவரது நெருங்கிய துணை டாக்டர் முஜம்மில் ஷகீல் கனாயி, 2022ஆம் ஆண்டு துருக்கிக்கு பயணம் செய்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், இருவரும் துருக்கியில் தங்கள் தீவிரவாத அமைப்பினரைக் சந்தித்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த தகவல், டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் வெளிநாட்டு தொடர்புகள் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Read More : டெல்லி குண்டுவெடிப்பு!. i20 காரை ஓட்டிச் சென்றது உமர் உன் நபி தான்!. DNA சோதனையில் உறுதி!.



