விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்.அதிகாரி அருண்ராஜ், விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையவுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தவெகவும் அதற்கு இணையாக இருக்க வேண்டும் என விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தவெகவுக்குள் கொண்டுவர விஜய் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் பிரபல பேச்சாளரான ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ஏற்கனவே தவெகவில் ஜான் ஆரோக்கியசாமி ஆலோசகராக இருந்து வருகிறார். இந்த சூழலில் தான், அருண்ராஜும் ரகசியமாக ஆலோசனையாளராக பணியாற்றி வந்துள்ளார். அருண் ராஜ், இந்திய வருமான வரித்துறையில் பணியாற்றியவர்.
அடிப்படையில் மருத்துவரான இவர், யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியானார். மேலும், இவர் அரசியலிலும் ஈடுபட திட்டமிட்டிருந்தார். ஆனால், நேரடியாக அல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி மூலம் தவெகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை அருண்ராஜ் திடீரென ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தான் தமிழக வெற்றி கழகத்தில் இன்று அவர் இணைய இருப்பதாகவும் அவருக்கு இணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இன்று சென்னை பனையூரில் விஜய் தவெகவில் இணைகிறார். அதேபோல, மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமியும் இணைவதாக கூறப்படுகிறது.
அதேபோல் திமுக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணையவுள்ளனர். முன்னாள் நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையின் மரிய வில்சன் மற்றும் பாஜகவை சேர்ந்த ஒருவரும் தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
Read More : கூகுள் குரோமை அப்டேட் பண்ணிட்டீங்களா..? உங்கள் லேப்டாப், கணினிக்கு ஆபத்து..!! உடனே இதை பண்ணுங்க..!!