ஆன்லைனில் போன் வாங்க விரும்புகிறீர்களா? அப்போ இன்பினிக்ஸ் மொபைல நீங்க ரொம்பவே குறைந்த விலைக்கு நீங்கள் வாங்க முடியும்.
Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன அந்த நிறுவனம் ரூ.5,799க்கு கொடுக்கிறாங்க. முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எக்ஸ்சேஞ்ச் சலுகையில இந்த போனில் தள்ளுபடியும் ரூ.5,200 தள்ளுபடி கொடுக்கிறாங்க. அதாவது. ரூ.599-க்கு நீங்க இந்த அழகான ஸ்மார்ட் போன வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்… ஆனா நீங்கள் கொடுக்கும் பழைய போனின் மதிப்பை எவ்வளவு என்பது பொறுத்தே ரூ.599-க்கு போன வாங்க முடியும்.
Infinix Smart 6 HD – சிறப்பம்சங்கள் : Infinix Smart 6 HD மொபைல், 6.6 இன்ச் TFT LCD டிஸ்ப்ளே உள்ளது. போன் MediaTek-ன் Helio A22 SoC-ல் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, இது பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஒரே ஒரு சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் உள்ளது. இது மிகவும் பிரீமியம் டிரிபிள்-கேமரா அமைப்பைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்புறத்தில் உள்ள ஒற்றை சென்சார் 8 மெகாபிக்சல்கள் கொண்டது. போனின் முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க, 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டபுள் சிம் ட்ரேக்களை கொண்ட இந்த போன் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் கொண்ட ஒற்றை ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி உள்ளது. இது 5W சார்ஜிங்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.