பரபரப்பு..! திருவிழாவின் போது சாய்ந்து விழுந்த பிரமாண்ட தேர்…! பக்தர்கள் அதிர்ச்சி…!

பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது அலங்கார பகுதி சாய்ந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.


பெரம்பலூர் மாவட்டம் குன்னை அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லையம்மாள் கோவில் உள்ளது. இங்கு காலம் காலமாக ஆணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி வெகு விமர்சையாக திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அபிஷேகம் அலங்காரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

திருவிழாவின் எட்டாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற இருந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரை வடம்பிடித்து இழுத்தபோது தேரின் அச்சி முறிந்து, அலங்கார பகுதியான மேல் உள்ள கோபுர பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தை கண்டதும் அங்கிருந்த மக்கள் அலறியடுத்து ஓடினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. பின்னர் சரிந்து விழுந்த தேரின் மேல் பகுதியை சரி செய்துவிட்டு, தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.

Subscribe to my YouTube Channel

Read More: மீதமான சாதத்தை இப்படி தான் சூடாக்கி சாப்பிடணும்.. இல்லன்னா கல்லீரலுக்கு ஆபத்து.. எச்சரிக்கும் நிபுணர்கள்..

Newsnation_Admin

Next Post

”Google search” செய்யப்படும் முறையில் புதிய அம்சம் அறிமுகம்!. எப்படி பயன்படுத்துவது?. சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Wed Jul 9 , 2025
கூகுள் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. கூகுள் இப்போது இந்தியாவில் அதன் தேடல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்முறையை (AI) தொடங்கியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) சமூக ஊடக தளமான X இல் இதை அறிவித்தார். “ஆய்வகங்களில் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தேடலில் AI பயன்முறையை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இது […]
google search 11zon

You May Like