சென்னையில் இன்று காலை முதலே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம், மேதா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வரும் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
கோயம்பேட்டில் வசித்து வரும் சவுதி என்பவரின் இல்லத்திலும், நெற்குன்றம் பகுதியில் சிகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் என்பவரின் வீட்டிலும், அத்துடன் சூளைமேடு மேதா நகரில் உள்ள மற்றொரு வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாகப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
மேலும், பெரும் தொகையிலான வரி ஏய்ப்பு புகாரும் இந்த சோதனைகளுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அமலாக்கத் துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : அக்காள் கணவரை நினைத்து ஏங்கிப் போன தங்கை..!! கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த மாமா..!! கோவையில் ஷாக்



