ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினுடன் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் சந்திக்க சென்றிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் “ தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டது.. இனி இந்த கூட்டணியில் இந்த குழு இடம்பெறாது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம்.” என்று அறிவித்தார்..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று 2வது முறையாக சந்திக்க சென்றுள்ளார்.. முதல்வரின் உடல்நலனை விசாரிப்பதற்காக அவரது இலத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார்.. அதிமுகவின் முக்கியமான தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்றுள்ளனர்.. ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினுடன் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் சந்திக்க சென்றிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
முன்னதாக இன்று காலை அடையாறில் உள்ள பூங்காவில் நடைபயிற்சியின் போது முதல்வர் சந்தித்தார் பன்னீர்செல்வம்.. இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்தது.. அப்போது இன்று காலை முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ நான் நடைபயிற்சி செய்வது வழக்கம்.. பூங்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது..” என்று கூறினார்..
மேலும் திமுக கூட்டணியை வீழ்த்துவது எங்கள் நோக்கம் இல்லை என்று பண்ரூட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ் முதல்வரை சந்திக்கவிருப்பது, திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணையக்கூடும் என்று தகவல் வெளியாகி வருகின்றன.. இது வெறும் மரியாதை நிமித்த சந்திப்பு இல்லை, அரசியல் நிமித்தமான சந்திப்பு என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..