2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வருகிற செப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான PORTAL கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு மே.27 -ம் தேதி ஆகியும் E Filing PORTAL திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக கூறினர்.
இதையடுத்து 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை வருமான வரித்துறை நீடித்துள்ளது. அதாவது 2025ம் ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் வருமான கணக்கை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கால அவகாசம் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை வருமான வரி துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. வருமான வரி படிவங்கள், அமைப்பு மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் TDS கிரெடிட் பிரதிபலிப்புகளில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மாத சம்பளம் பெறும் ஊழியர் தங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 46 நாட்கள் கிடைக்கும். கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
Read more: Vastu Tips: மறந்தும் இந்த கடவுளின் புகைப்படங்களை வீட்டில் வைக்க கூடாது..!! ஏன் தெரியுமா..?