தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் நாளை கனமழை பெய்யும் என்றும் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது..
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.. இது சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் தென் கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 250 கி.மீ தொலைவில் தென் கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது..
இது மேற்கு வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து இலங்கை அருகே இன்று மாலைக்குள் யாழ்ப்பாணம் – திரிகோணமலை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்..
அதே போல ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.. நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



