ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. ஜூலை 19 சனிக்கிழமை இரவு 9.22 மணியளவில் கிந்தோர் அவென்யூ அருகே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 23 வயதான சரண்ப்ரீத் சிங் தனது மனைவியுடன் நகரின் ஒளிக்கற்றைகளைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது இந்த தம்பதி தங்கள் காரை நிறுத்திய பிறகு 5 பேர் கொண்ட குழு அவர்களை சூழந்துகொண்டனர்..
சிங் மீது உலோகக் கட்டைகள் அல்லது கூர்மையான பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் “F*** off, Indian” உள்ளிட்ட தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை மீண்டும் மீண்டும் தாக்குவதையும் பார்க்க முடிகிறது…
மருத்துவமனை படுக்கையில் இருந்து 9நியூஸிடம் பேசிய சிங், இந்த தாக்குதல் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இருந்து ஏற்பட்டதாகவும், அது வெறுப்பு குற்றமாக மாறியதாகவும் கூறினார். “அவர்கள், ‘F*** off, Indian’ என்று சொன்னார்கள், அதன் பிறகு அவர்கள் குத்தத் தொடங்கினர்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக என்ஃபீல்டைச் சேர்ந்த 20 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர், மேலும் தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை பொதுமக்களிடம் தகவலுக்காக வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அடிலெய்டின் இந்திய சமூகத்தினரிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது.. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் தூண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் சிங்கிற்கு ஆதரவு பெருகி வருகிறது, இனவெறி கொண்ட வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தெற்கு ஆஸ்திரேலிய தலைவர் பீட்டர் மாலினாஸ்காஸ் இந்த சம்பவத்தை கண்டித்து, இது “முற்றிலும் வரவேற்கத்தக்கது அல்ல” என்றும் பரந்த சமூகத்தின் மதிப்புகளுக்கு முரணானது என்றும் கூறினார். மேலும் “எந்தவொரு இனத் தாக்குதலுக்கான ஆதாரத்தையும் நாம் காணும்போதெல்லாம், அது நமது மாநிலத்தில் முற்றிலும் வரவேற்கத்தக்கது அல்ல. நமது சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் இருக்கும் இடத்திற்கு ஒத்துப்போகவில்லை” என்று தெரிவித்தார்.
Read More : 26/11 தாக்குதலின் முக்கிய குற்றவாளி.. லஷ்கர் பயங்கரவாதி அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் மருத்துவமனையில் மரணம்..