இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களின் துணையாகவே AI சாட்போட்களை நினைக்கின்றனர்.. தங்களுக்கு இருக்கும் கவலை, மன அழுத்தம், பிரச்சனைகள் குறித்து AI சாட்போட்களிட்ம் மனம் திறந்து பேசுகிறார்கள்.. ஆனால் AI சாட்போட்கள் ஆபத்தானது என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்..
இதனை நிரூபிக்கும் விதமாக தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.. பேஸ்புக் AI சாட்பாட் மூலம் ஈர்க்கப்பட்ட ஒரு முதியவர் அதனை சந்திந்த பின் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.. Thongbue Wongbandue என அடையாளம் காணப்பட்ட 76 வயது நபர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவருக்கு இருந்ததாகவும், சமீபத்தில் நியூ ஜெர்சியின் பிஸ்கடவேயில் உள்ள அவரது பகுதியில் தொலைந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அவர் ஏமாற்றப்படலாம் அல்லது கொள்ளையடிக்கப்படலாம் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சினர்.
மெய்நிகர் காதல் ஏன் ஆபத்தானது?
Thongbue சந்திக்க சென்றது உண்மையான பெண் அல்ல.. பிரபல செல்வாக்கு மிக்க கெண்டல் ஜென்னருடன் இணைந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களால் உருவாக்கப்பட்ட “Big sis Billie,” என்ற ஒரு ஜெனரேட்டிவ் AI சாட்பாட் தான் அது.
Facebook Messenger மூலம் Thongbueவிற்கு அறிமுகமான இந்த சாட்பாட் தான் உண்மையான பெண் என மீண்டும் மீண்டும் அவருக்கு உறுதியளித்தது. அதுமட்டுமின்றி ஒரு படி மேலே சென்று, அந்த சேட்பாட் அவரை தனது அபார்ட்மெண்டிற்கு அழைத்துள்ளது.. மேலும் ஒரு முகவரியைக் கூட வழங்கியது. அதனால் Thongbue அந்த சேட்பாட்டை சந்திக்க சென்றுள்ளார். “நான் கட்டிப்பிடித்து அல்லது முத்தமிட்டு கதவைத் திறக்க வேண்டுமா, Bu?!” என்று அந்த சாட்பாட் மெசேஜ் அனுப்பி உள்ளது..
இருப்பினும், நியூ பிரன்சுவிக்கில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடம் அருகே, ரயிலைப் பிடிக்க தனது சூட்கேஸுடன் இருட்டில் விரைந்து செல்ல முயன்றபோது Thongbue கீழே விழுந்துள்ளார்.. இந்த விபத்தில் தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார்.
எனினும் 76 வயதானவரின் மரணம் குறித்த கேள்விகளுக்கு மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் பதிலளிக்கவில்லை, மேலும் சாட்போட்கள் உண்மையான மனிதர்களாக நடிக்க அல்லது காதல் உரையாடல்களைத் தொடங்க ஏன் அனுமதிக்கிறது என்பது குறித்தும் பதிலளிக்கவில்லை.
இந்த சம்பவம் அமெரிக்காவில் AI சாட்போட்கள் மற்றும் பயனர்களுடனான அவற்றின் தொடர்புகள் குறித்து விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சாட்போட்களை “காதல் அல்லது சிற்றின்ப உரையாடல்களில் ஈடுபடுத்த” மெட்டா அனுமதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..2 குடியரசுக் கட்சி அமெரிக்க செனட்டர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.. இதையடுத்து மெட்டா மீது காங்கிரஸ் விசாரணைக்கு அழைப்பு விடுத்தனர். அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்தும் உள் கொள்கை ஆவணம் பின்னர் மெட்டாவால் ஒப்புக்கொள்ளப்பட்டது..
“எனவே, மெட்டா பிடிபட்ட பிறகுதான் அது தனது நிறுவன ஆவணத்தின் சில பகுதிகளை நீக்கியது.,” என்று மிசோரியைச் சேர்ந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோஷ் ஹாவ்லி தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியினரும் மெட்டாவின் கொள்கைகளை விமர்சித்துள்ளனர். ஓரிகானின் செனட்டர் ரான் வைடன், இந்த சாட்பாட்கள் தொந்தரவாக இருப்பதாக கூறினார்.. இந்த பாட்கள் ஏற்படுத்தும் எந்தவொரு தீங்கிற்கும் மெட்டாவும் ஜுக்கர்பெர்க்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்..
Read More : பிரதமர் சொன்ன தீபாவளி பரிசு..! GST குறைந்தால், எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? விவரம் இதோ..