ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் டால்டன்கஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர், தங்களை போலீஸ் என அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சிறுமியிடம் பெயர் மற்றும் மற்ற விவரங்களை விசாரித்துள்ளனர்.
பின்னர், இருவரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வர வேண்டும். விசாரணை முடிந்ததும் மீண்டும் இதே இடத்தில் கொண்டு வந்து விட்டு விடுவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, 16 வயது சிறுமியை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், சிறுமியிடமும், அவரது தங்கையிடமும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, சிறுமியின் தங்கை வாகனத்தில் இருந்து கீழே குடித்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதைப் பார்த்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து இருவரையும் சுற்றி வளைத்தனர். பின்னர், சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸ் எனக்கூறி அவரை கூட்டு பலாத்காரம் செய்த சோனு குமார் மற்றும் சுனித் குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.