குடும்பமே சேர்ந்து விபச்சார தொழில்..!! பல ஆண்களுடன் உல்லாசம்..!! கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Chennai 2026 1

சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு சாதாரண வாடகை வீட்டை தலைமையிடமாக கொண்டு, சுகந்தி என்ற பெண் தனது ஒட்டுமொத்த குடும்பத்தோடு இணைந்து நடத்திய இந்த க்ரைம் த்ரில்லர் மோசடி, தற்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளது. தனது தாய் பாத்திமா, தம்பி மணி, தங்கை கணவர் வினோத் என ஒரு குடும்பமே ஒரு கம்பெனி போல செயல்பட்டு, காதல் என்ற உணர்வை ஆயுதமாகப் பயன்படுத்திப் பல இளைஞர்களின் வாழ்க்கையை சிதைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


வேலைக்கு செல்லும் வசதியான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்களை சமூக வலைதளங்கள் மூலம் சுகந்தி குறிவைப்பார். தனது தோழி கங்காவின் உதவியுடன், இன்முகத்தோடு பழகி ஆண்களை தன்வசப்படுத்துவார். பின்னர் அவர்களைத் தனது வீட்டிற்கோ அல்லது ரகசிய இடங்களுக்கோ வரவழைப்பார். அங்கு நெருக்கமாகப் பழகி அவர்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்ற பிறகு, சமயம் பார்த்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த கேட்ஜெட்களை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிடுவார்.

இந்தப் பின்னணியில் குட்டி ஜெயராஜ், பவன்குமார் உள்ளிட்ட ஒரு ரவுடி கும்பலே இவர்களுக்குப் பாதுகாப்பாக நின்றுள்ளது. சமீபத்தில் மகேஷ் என்ற இளைஞர் சுகந்தியின் காதல் வலையில் சிக்கியபோதுதான், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஒருகட்டத்தில் சுகந்தியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மகேஷ், ரகசியமாக துப்பு துலக்க தொடங்கினார். அப்போதுதான் சுகந்தி ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும், அவருக்குக் குழந்தை இருப்பதை மறைத்துக் காதல் நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

மேலும், நீலாங்கரை காவல் நிலையத்திலேயே மரிமதாஸ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்ததும், அங்கிருந்து தப்பித்துத் தலைமறைவானதும் விசாரணையில் அம்பலமானது. ஒரு குடும்பமே கூட்டுச் சேர்ந்து விபச்சாரம் மற்றும் பணப் பறிப்பில் ஈடுபட்டது அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் ‘மாஸ்டர் மைண்ட்’ சுகந்தி மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்கக் காவல்துறை தீவிரமாகத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய கும்பல்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : “12 தொகுதிகள்.. உதயசூரியன் வேண்டாம்.. தனிச் சின்னம் தான்”..!! திமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த வைகோ..!!

CHELLA

Next Post

அதிமுகவில் கூண்டோடு இணைந்த தவெக நிர்வாகிகள்..!! அதிர்ச்சியில் விஜய்..!! குஷியில் இபிஎஸ்..!!

Sat Feb 21 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்ட அரசியலில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் […]
eps vijay 1

You May Like