பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.5 கோடி பணத்தை படத்தயாரிப்பு மற்றும் சொந்த செலவுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இந்த மோசடி வழக்கில் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறை கைது செய்துள்ளது.. ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, ரூ.5 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்தனர்..
டெல்லி மட்டுமல்ல, சென்னையிலும் இதே போல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : “சில ஆண்டுகளுக்கு முன்பே..” புதிய குண்டை தூக்கி போட்ட ஜோய் கிரிசில்டா.. மௌனம் காக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்..