ஆபாசத் தளமாகக் கருதப்படும் OnlyFans தளத்தில், இப்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்துள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் (Tymal Mills) தான் OnlyFans தளத்தில் தனக்கென ஒரு பக்கத்தைத் தொடங்கியுள்ளார். இது வரை ஆபாசத் தளமாகவே அறியப்பட்ட இந்த தளத்தில் அவர் இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான டைமல் மில்ஸ், 2016 முதல் 2023 வரை இங்கிலாந்து தேசிய டி20 அணிக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும், அவர் Royal Challengers Bangalore மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்று, 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
OnlyFans தளம் பெரும்பாலும் ஆபாச உள்ளடக்கத்திற்காகவே பயன்படுகிறது என்றாலும், இது குறித்து டைமல் மில்ஸ் தனது பதிலில், “இங்கு எந்த கவர்ச்சி புகைப்படமும் இருக்காது. இது முழுக்க முழுக்க கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்ததுதான். ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மற்றும் என் கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு புதிய வாய்ப்பு” என்றார்.
நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றிப் பேச இந்த தளத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக வாழ்க்கையின் நன்மை தீமைகளை விளக்க வீடியோக்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தலாம்” என்றார். மேலும், “நான் மக்களை விலைக்கு வாங்க விரும்பவில்லை. தற்போது சந்தா இலவசம். பின்னர் சில அம்சங்களுக்கு கட்டணம் இருக்கலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு பின்வட்டங்களில் இது சர்ச்சையை கிளப்பியிருந்தாலும், விளையாட்டை தாண்டி ரசிகர்களுடன் நேரடி உரையாடலுக்கான ஒரு புதிய முயற்சி என சிலர் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம், OnlyFans போன்ற தளங்களில் விளையாட்டு வீரர்கள் இணைவது எதிர்மறையான முன்னுதாரணமென்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Read more: பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்…