Flash : பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்.. பல்வேறு தரப்பினர் இரங்கல்..

download

பிரபல கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 87.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்த இவர் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் வசந்தி தேவி.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, துணைவேந்தராக 1992 முதல் 1998 வரை வசந்தி தேவி இருந்துள்ளார்.


2002-2005 வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார். மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு முன்னோடியாக அவர் இருந்தார். சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி. 1976-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் கல்வியாளர் வசந்தி தேவி..

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக வசந்தி தேவி சென்னையில் காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

RUPA

Next Post

தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுகிறது.. ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.. ஆணையம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Fri Aug 1 , 2025
தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஆணையம் இதற்கு பதிலளித்துள்ளது.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ” இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான […]
eci dimisses rahul gandhi allegations 1754042575873 1754042600413

You May Like