கொரிய ஆக்ஷன், காதல் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், City Hunter, Doctor Stranger, The Legend of the Blue Sea போன்ற புகழ்பெற்ற சீரிஸ்களில் நடித்த சோய் ஜங் வூ காலமானார். இவருக்கு வயது 68. இவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
1957ஆம் ஆண்டு பிறந்த சோய் ஜங் வூ, 1975ஆம் ஆண்டு “தி லைஃப் ஆஃப் ஆன் ஆக்டர்” என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், ஷின்சி போன்ற நாடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார். மேலும் மேடை நடிகராகவும் குரல் நடிகராகவும் வலம் வந்தார். தன்னுள் இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்தார்.
“கடவுளின் வினாடி வினா” தொடர், “இரண்டு போலீசார்,” “பப்ளிக் எனிமி 2,” “லேடி வெஞ்சியன்ஸ்க்கு அனுதாபம்,” “தி சேஸர்,” “புத்திசாலித்தனமான மரபு,” “வழக்கறிஞர் இளவரசி,” “குமிஹோ: டேல் ஆஃப் தி ஃபாக்ஸ் சைல்ட்,” “மிடாஸ்,” ” மை டாட்டர் சியோ யங் ,” ” மாஸ்டர்ஸ் சன் ,” “கால் இட் லவ்,” “டைரண்ட்,” ” ஹூ இஸ் ஷி! ” மற்றும் “தி டேல் ஆஃப் லேடி ஓகே” உள்ளிட்ட பல்வேறு படைப்புகளில் அவர் தோன்றினார்.
இந்நிலையில், சோய் ஜங் வூ-வின் இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும், இறுதி ஊர்வலம் நாளை (மே 29) காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் சோய் ஜங் வூவின் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.