மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்..
இந்திய திரைத்துறையில் பழமையான மற்றும் பிரபலமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் ஒன்று.. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.. நடிகர் திலகம் சிவாஜி, உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களை திரையுலகில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம் நிறுவனம்.. 80களில் ரஜினி, கமல் நடித்த பெரும்பாலான ஹிட் படங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்கள் தான்.
ஏவிஎம் நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக பொறுப்புகளை சரவணன் வகித்துள்ளார்.. இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார்.. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்..
பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.. அவருக்கு வயது 86.. அவரின் உடல் சென்னை வட பழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுளது.. அவரின் உடலுக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.. அவருடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.. அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. ஏவிஎம் சரவணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது..



