நள்ளிரவில் ஏசி கம்ப்ரசர் வெடித்து கோர விபத்து.. வளர்ப்பு நாய் உட்பட ஒரு குடும்பமே பலியான சோகம்..!!

AC Blast

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஏர் கண்டிஷனரின் கம்ப்ரசர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஃபரிதாபாத்தில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில், அதிகாலை 1.30 மணியளவில் திடீரென முதல் தளத்தில் இருந்த ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்தது. அந்த வீட்டில் அப்போது யாரும் இல்லாத நிலையில், அடர்ந்த புகை எழுந்தது. இரண்டாவது தளம் முழுவதும் புகை சூழ தொடங்கியதால் இரண்டாவது தளத்தில் தூங்கி கொண்டிருந்த கபூரின் குடும்பத்தினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், சச்சின் கபூர், அவரின் மனைவி ரிங்கு கபூர், மகள் சுஜன் கபூர் மற்றும் வளர்பு நாயும் புகையில் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதே வீட்டில் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கபூர் தம்பதியின் மகன் உடனே நிலைமையை உணர்ந்து ஜன்னல் வழியாக குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

ஆனால் அவர் கடுமையாக காயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏதோ விபத்து நடந்திருப்பதை உணர்ந்த அக்கம் பக்கத்து வீட்டார் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் புகையை வெளியேற்றி உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்ற்றினர். பின்னர் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Read more: சுந்தரி சீரியல் நடிகைக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஏஜெண்ட் கைது..! விசாரணையில் திடுக் தகவல்..

English Summary

Faridabad Man, Wife, Daughter, Pet Dog Killed In AC Blast

Next Post

இவர்களெல்லாம் கண்டிப்பாக முட்டை சாப்பிடக்கூடாது.. பக்க விளைவுகள் பாடாய் படுத்தும்..!!

Tue Sep 9 , 2025
These people should definitely not eat eggs.. The side effects will be painful..!!
Egg 1

You May Like