புல்லட் ரயிலை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் ரயிலை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவில் புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் தனது பயணத்தை தொடங்கும் என்று சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். தற்போது உலகின் பல நாடுகளும் புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. ஆனால் சீனாவிலிருந்து வந்துள்ள செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.. உண்மையில், சீனா புல்லட் ரயிலை விட சிறந்த ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஆம்.. புல்லட் ரயிலை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் ரயிலை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த ரயில் மாக்லேவ் ரயில் என்று அழைக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 600 கிமீ வரை இருக்கும்.
மாக்லேவ் ரயிலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது சாதாரண ரயில்களைப் போல தண்டவாளங்களில் ஓடாது, ஆனால் காற்றில் மிதக்கிறது, இதன் காரணமாக ஒரு சாதாரண புல்லட் ரயில் கூட அதன் வேகத்தை எட்ட முடியாது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெறும் 17வது நவீன ரயில்வே கண்காட்சியில் இந்த ரயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு சக்கரங்கள் இல்லை, மேலும் இது அதன் காந்த சக்தியின் வேகத்தில் முன்னோக்கி நகர்கிறது.
ரயில்கள் காந்த உந்துவிசை அமைப்புகளுடன் குறைந்த-வெற்றிடக் குழாய்களால் இயக்கப்படுகின்றன, அவை தண்டவாளங்களுடன் மிகக் குறைந்த உராய்வைக் கொண்டுள்ளன, இதனால் ரயில்கள் காற்றில் மிதப்பது போல் தோன்றும்.
சீனா மாக்லேவ் ரயிலின் முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இது வணிக ரீதியான ஓட்டத்திற்காக இன்னும் சோதிக்கப்படவில்லை. இந்த ரயில் சீனாவின் தற்போதைய ரயில் சேவைகளுக்கு கூடுதலாக முக்கிய நகரங்களுக்கு இடையே இயங்கும்.
தகவலின்படி, சீனாவின் மாக்லேவ் ரயில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையேயான 1200 கி.மீ தூரத்தை மணிக்கு 600 கி.மீ வேகத்தில் சுமார் 2 மணி நேரத்தில் கடக்கும். இந்த ரயில் இந்தியாவில் ஓடினால், சென்னையில் இருந்து புனேவுக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றடைய முடியும்.