அமெரிக்காவில் வேகமாக பரவும் கோவிட் பி.க்யூ 1 …… !! இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் ?

அமெரிக்காவில் புதியதாக பரவி வரும் கோவிட் பி.க்யூ 1 என்ற மாறுபட்ட வைரஸ் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கோவிட். 10 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடம் சோதனைக்குட்படுத்தப்பட்டு இதன் போக்கை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் புதிய பதவிகளின்படி உலகம் முழுவதிலும் அமெரிக்காவிலும் புதியதாக தொற்று பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. புதிய வேரியன்ட் வைரஸ் பி.க்யூ  10 பேரில் ஒருவருக்கு இந்த பி.க்யூ வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.


அமெரிக்க அதிபர் ஜோபைடனின் ஆலோசகரும் தொற்று நோய் நிபுணருமான டாக்டர் அந்தோனி இந்த பிக்யூ 1 பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவிட் வேரியன்ட் வைரஸ் ஏற்கனவே பல நாடுகளில் புதிய வைரசை தோற்றுவித்துள்ளது. சீனாவில் உருவாகியுள்ள புதிய வைரஸ் அதிக பரிமாற்றங்களைக் கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் 1900 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் என்ன சிக்கல் ? : பி.ஏ.5 உடன் ஒப்பிட்டு பார்த்ததில் பி.க்யூ 1  செப்டம்பர்  மாத தொடக்கத்தில் பெயரிடப்பட்டது. ஏற்கனவே ஜெர்மனி, இங்கிலாந்து , ஐரோப்பிய நாடுகளில் பரவிட்டது. .இது புதுப்பிக்கப்பட்ட அலைகளை உருவாக்கி உள்ளது. பி.க்யூ 1 மற்றும் பிக்யூ 1.1 ஒவ்வொன்றும் 5.7 சதவீத நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கணிசமான எண்ணிக்கையில் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இது முந்தைய நோய்த்தெற்றுகள் அல்லது தடுப்பூசிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் என எச்சரித்துள்ளது. குறிப்பிடப்பட்ட இந்த வைரஸ்கள் அதிக பரவும் தன்மை உடையது. இதுவரை கனடாவில் 20000 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதனால் மீண்டும் பழைய நிலைக்கே செல்ல வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Next Post

ஒரு நிமிடத்தில் சுடச்சுட இட்லி வழங்கும் ’வெண்டிங்’ இயந்திரம்…

Sat Oct 15 , 2022
பெங்களூருவில் ஒரு நிமிடத்தில் தானாக சட்னி , சாம்பாருடன் இட்லி வழங்கும் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு தொழிலதிபர்கள் ஷரன் ஹிரேமத் , சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோர் ஸ்டார்ட் அப நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இவர்கள் இந்த இயந்திரத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார்கள். ஏ.டி.எம். எப்படி கார்டு போட்டால் பணம் வருமோ அதே போல பணம் போட்டால் இது சுட சுட இல்லி தருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காலை உணவு […]
idly

You May Like