ஓடும் பேருந்தில் பெற்ற மகளிடமே அத்துமீறிய தந்தை..!! அடித்து துவைத்த மக்கள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!! திருச்சியில் பயங்கரம்..!!

Bus 2025

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, வேலுவின் மனைவி இளைய மகளுடன் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் மூத்த மகள் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.


தனியார் பள்ளியில் கல்வி கற்று வந்த அந்த சிறுமி, தந்தையின் மது பழக்கத்தால் நாள்தோறும் துன்பப்பட்டதாக கூறப்படுகிறது. வேலு, அடிக்கடி கத்தியை காட்டி மிரட்டியதுடன், சிறுமியின் மீது பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தையின் அச்சுறுத்தலால், சிறுமி இதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி வேலு தனது மகளுடன் சேலம் நோக்கி பேருந்தில் பயணித்தபோது, மீண்டும் அசிங்க செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக வேலுவை பிடித்து அடித்து, நடுவழியிலேயே இறக்கி விட்டனர். பின்னர் சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, முகவரி தெரியாத காரணத்தால், அருகில் இருந்த கிறிஸ்தவ சபையின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அங்குள்ள நிர்வாகிகள் சிறுமியிடம் பேசும்போது, தந்தையின் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமி மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு, போலீசில் முறையிடப்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் வேலுவை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மிளகாய் தூளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

CHELLA

Next Post

தங்கையை கொன்று கரும்புத் தோட்டத்திற்குள் அண்ணன் செய்த அசிங்கம்..!! போலீசுக்கே டிமிக்கி கொடுத்த பரபரப்பு சம்பவம்..!!

Sat Nov 1 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சொந்த அண்ணனே தங்கையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவரது தங்கை நீலம் (19). அரசு வழங்கிய சுமார் ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்வதில் அவர்களிடையே நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்துள்ளது. சமீபத்தில், இந்தப் பணப் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராம் […]
Crime 2025 2

You May Like