அப்பா VS மகன் இல்ல.. அக்கா VS தம்பி.. பாமகவில் கிளம்பி உள்ள புதிய புயல்..? அன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்!

ramadoss srikanthi

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..


இதனிடையே சமீபத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.. இதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இதை தொடர்ந்து ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திக்கு ராமதாஸ் அருகே இருக்கைகள் போடப்பட்டது.. மேலும் இந்த பொதுக்குழுவில் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீ காந்தி என்றே அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்..

இந்த சூழலில் சில நாட்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், அன்புமணி, பாலு, திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதிய நிர்வாக குழு பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமனம செய்தார்.. இந்த நிர்வாகக் குழுவில் ராமதாஸ், ஜி.கே மணி, முரளி சங்கர், முத்துக்குமரன் உள்ளிட்ட 21 நிர்வாகிகளை நியமனம் செய்தார்..

மேலும் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.. அதன்படி ராமதாஸ் தரப்பின் நிர்வாகிகள் குழுவில் தற்போது ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றார்.. அன்புமணிக்கு மாற்றாக பாமகவில் ஸ்ரீகாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் பாமகவில் புதிய புயல் கிளம்பி உள்ளது.. திண்டிவனத்தில் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் ஆதரவாளர்கள் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. ராமதாஸின் மகள் ஸ்ரீ காந்தியின் புகைப்படத்துன் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.. அன்புமணி நடை பயணத்திற்கு வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு எதிராக பேனர் வைக்கப்பட்டுள்ளது.. அன்புமணி வரும் 1-ம் தேதி திண்டிவனத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் அன்புமணியை வரவேற்று அவரின் ஆதரவாளர்கள் பேனர்களை வைத்துள்ளனர்..

இந்த பேனர்களுக்கு எதிராக, அன்புமணி, ஸ்ரீகாந்தி புகைப்படங்களுடன் கூடிய பேனர்களை ராமதாஸ் தரப்பினர் வைத்துள்ளனர்.. ஏற்கனவே அன்புமணிக்கு மாற்றாக ஸ்ரீகாந்தியை பாமகவின் முக்கிய முகமாக மாற்ற ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த பேனர் விவகாரம் பாமவில் புதிய புயலை கிளப்பி உள்ளது.. தற்போது பாமகவில் அப்பா VS மகன் என்பது மாறி, அக்கா VS தம்பி என்ற போட்டி தொடங்கி விட்டதாகவே பார்க்கப்படுகிறது.. மேலும் அன்புமணிக்கு செக் வைக்க ராமதாஸ் மகளுக்கு மகுடம் சூட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது..

RUPA

Next Post

நாளை முதல் அமல்.. இந்தியா மீது அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு.. ட்ரம்ப் திட்டவட்டம்..!!

Tue Aug 26 , 2025
Effective from tomorrow.. 25% additional US tax on India.. Trump's plan..!!
donald trump narendra modi 030525236 16x9 1

You May Like