கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர், தனது குடும்பத்துடன் காசர்கோடு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது 14 வயது மகளுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் பரிசோதனை செய்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தந்தை தன்னை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக் கேட்டுப் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், சிறுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், முந்தைய இரவு அவர் தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரைப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததும், அதற்காக பாஸ்போர்ட் எடுக்கும் நோக்கத்திலேயே வீட்டுக்குத் திரும்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



