தந்தையின் வாழ்நாளில் மகள்களின் பங்கு முக்கியமானது. இந்த உணர்வை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தும் வகையில், போலந்து நாட்டில் ஜாகிலோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இதுபற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அப்பா-மகள் உறவு என்பது மிகவும் அற்புதமானது. எல்லா மகள்களுக்கும் தனது அப்பாதான் முதல் ஹீரோ. பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் மகளை, தன் அம்மாவாக பார்க்கிறார்கள். ஒரு அப்பாவைப் பொறுத்தவரை, அவரது முதல் காதல் எப்போதும் அவரது மகளாகவே இருக்கும். “முத்தம் என்பது காமத்தின் வெளிப்பாடு அல்ல, அன்பின் வெளிப்பாடு” என்பதை மகளை பெற்ற அப்பாக்கள் மட்டுமே உணரக்கூடியவர்கள். ஒரு ஆணின் குணநலன்களை முதன்முதலாக அவள் தனது அப்பாவின் மூலம் அறிகிறாள்.
அதனால் தான், “மகள்கள் தான் ஆண்களை உருவாக்குகிறார்கள்” என்ற சொற்றொடர் உருவாகியுள்ளது. அதேபோல, பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அப்பா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. சமீபத்திய ஆய்வும் அதனை நிரூபித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கு 4310 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2162 பேர் தந்தையர்.
ஆய்வின் முடிவில் மகன்களின் எண்ணிக்கைக்கும், தந்தையின் ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் மகள் இருந்தால் தந்தையின் ஆயுள் 74 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், எத்தனை மகள்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆயுள் காலம் மாறுபடும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகள்களை பெறாத தந்தையரை விட மகள்களை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மன நலமும், சுயமதிப்பும் சிரப்பாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக, குழந்தைகள் உள்ள பெற்றோர் அந்தக் குழந்தைகள் எந்தப் பாலினமானவர்களாக இருந்தாலும் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியமாகவும் வாழ வாய்ப்பு அதிகம் என்பதையும் இந்த ஆய்வு உறுதி செய்கிறது. தந்தை மகள் உறவு வாழ்நாளைத் தாண்டி மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.
Read more: சிக்கன் முட்டை விலை கிடுகிடு சரிவு.. அசைவ பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!