ED புகாரில் முகாந்திரம் உள்ளது.. அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யுங்க..! உயர்நீதிமன்றம் அதிரடி..!

KN Nehru 2025

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது..


இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுறை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்..

இந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..

வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவற்றின் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் “ அமலாக்கத்துறை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது..

அப்போது நீதிபதிகள் “ நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்..

அமலாக்கத்துறை போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த தேவையில்லை.. போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்..

Read More : திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை? வேட்பாளர்களும் ரெடி.. வெளியானது பட்டியல்..!

RUPA

Next Post

Breaking : திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்..! திமுக உடன் கூட்டணியா?

Fri Feb 20 , 2026
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
526858 stalin ops udhay

You May Like