தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.. 12 அண்டுகள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது..
இந்த பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6 கோடி 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தது.. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, இறந்தவர்கள், இரட்டை பதிவு முகவரி மாற்றம் போன்றவை கண்டறியப்பட்டு அதில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன, அந்த வகையில் மொத்தம் 97, லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.. அதன்பின்னர் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்..
இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24 லட்சத்து 47 ஆயிரம் பேர் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி இருந்தனர்..
அதே போல் இணையதளம் வழியாக 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.. விண்ணப்பங்கள் சரிபார்க்கும் படி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தன..
இன்று காலையில் இருந்தே மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார்.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிப்புதமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும். மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் அடங்குவர்..
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக 27,53,793 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் SIR பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்..



