பங்களா வீடு.. சொகுசு கார்.. போதை பொருள் விற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்த இளைஞன்..!! சிக்கியது எப்படி..?

drug 1

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில் மாநகர போலீஸ் ஆணையர் சரவண சுந்தர் தலைமையிலான போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில், பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற ரோந்து பணியில், சந்தேகத்துக்கிடமான விதத்தில் நின்றிருந்த ஒருவரை போலீசார் சோதனையின்போது கைது செய்தனர். அவருடைய பையில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார். அதிக லாபம் அடையக் கிடைக்கும் எனும் நம்பிக்கையில், கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை வாங்கி கோவையில் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அங்கு இந்த போதைப்பொருட்களை பதுக்கி வைத்து, தேவையுள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும், அந்த வருமானத்தில் தங்க நகைகள், விலை உயர்ந்த கார் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் நடைபெற்ற சோதனையில் 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கூடுதலாக, அவரது கையிலிருந்த நகைகள் மற்றும் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read more: “இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.. அது தண்டிக்கப்படும்..” ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை..

Next Post

டேட்டிங் கன்ஃபார்மா..? ஒரே காரில் ஒன்றாக சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி..

Wed Jun 18 , 2025
திரைத்துறையை பொறுத்தவரை ஓரிரு படங்கள் சேர்ந்து நடித்தாலே நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் பரவத் தொடங்கிவிடும். இந்த கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கும் பிரபலங்கள் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி அடிக்கடி இதுபோன்ற கிசுகிசு செய்திகளில் சிக்கி வருகின்றனர். மேலும் இந்த ஜோடி டேட்டிங்கில் இருந்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த […]
Vijay Rashmika 1750213493837 1750213494010 1

You May Like