மதுரையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது..
மதுரையில் வைகை தென்கரையின் ஓபுலா படித்துறை பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.. இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளது.. தகவலறிந்து பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்..
இந்த விபத்தில், குடோனில் இருந்த பழைய பேப்பர்கள் மற்றும் பிற பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்தன.. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : சட்டவிரோத பண பரிமாற்றம்: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!