சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.. இதனால் அந்த மாலின் 3 மாடிகளிலும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.. தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிதறி ஓடினர்..
மாலில் 10 மணிக்கு பிறகு தான் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.. எனினும் 8 மணிக்கே இந்த மாலில் வேலை செய்யு ஊழியர்கள் பணிக்கு வந்துவிடுவார்கள்.. அந்த வகையில் இன்று காலை அவர்கள் பணிக்கு வந்த போது தான் சுமார் 8.30 மணியளவில் லிஃப்டில் இன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து பதறிப்போன ஊழியர்கள் எமெர்ஜென்ஸி சைரன் ஒலிக்கப்பட்டது.. அதன்பிற்கு ஊழியர்கள் அனைவரும் மாலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.. இதையடுத்து தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டாலும் மால் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.. இந்த புகையை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.. அப்பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. மாலில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்க சென்றவர்கள் வெளியே காத்திருக்கின்றனர்..
Read More : ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி..!



