தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

tn gov diwali

நாடு முழுவதும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பலகாரங்களும், இனிப்புகளும், பட்டாசுகளும் தான் நம் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி உடன் கொண்டாடி வருகின்றனர்.. இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட மக்கள் மகிழ்ச்சி உடன் தயாராகி வருகின்றனர்.


இந்த நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2018 முதல் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.. தீபாவளி தினத்தில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.. குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.. குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.. மருத்துமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கரூர் துயரம்.. சிபிஐக்கு கைமாறிய வழக்கு.. ஆவணங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்த SIT..!

RUPA

Next Post

“அன்று கலைஞருக்கு இருந்த அதே ஏக்கம் இன்று எனக்கும் இருக்கு..” உதயநிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..

Tue Oct 14 , 2025
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ நாட்டில் பெருமை சேர்க்கும் வகையில் பரிசுகளை வெல்ல உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.. திமுகவின் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாடு விளையாட்டு துறையின் பொற்காலமாக இருக்கிறது.. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு எல்லா […]
g1 1727158359 1 1

You May Like