வருமான வரி செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். குறிப்பாக, கோடிகளில் சம்பாதிக்கும் திரையுலக பிரபலங்கள், ஆண்டு வருமானத்திற்கேற்ப பெரும் தொகையை வரியாக செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்திய டாப் 10 திரைப்பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் : ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடப்பு நிதியாண்டில் ரூ.92 கோடி வரி செலுத்தி முதலிடத்தில் உள்ளார். இவரது கடந்த ஆண்டின் திரைப்படங்கள் பெரும் வசூலை குவித்த நிலையில், இந்த வரித் தொகை இவரது உச்சபட்ச வருமானத்தை வெளிப்படுத்துகிறது.
விஜய் : தமிழ் சினிமாவின் தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய், ரூ.80 கோடி வருமான வரி செலுத்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னிந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கான் : பாலிவுட் திரையுலகின் மற்றொரு முன்னணி நட்சத்திரமான சல்மான் கான், ரூ.75 கோடி வரி செலுத்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது திரைப்படங்களின் வசூல் மற்றும் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் வருமானத்தின் அடிப்படையில் இந்த வரித் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் : 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் அசத்தி வரும் நடிகர் அமிதாப் பச்சன், ரூ.71 கோடி வரி செலுத்தி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். தனது அனுபவத்தாலும், ரசிகர்களிடம் உள்ள செல்வாக்கினாலும், இன்றும் இவர் அதிக வருமானம் ஈட்டி வருகிறார்.
அஜய் தேவ்கன் : பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ரூ.42 கோடி வருமான வரி செலுத்தி ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரது தொடர் திரைப்பட வெற்றிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் வருமானம் ஆகியவை இவரது வரித் தொகைக்குக் காரணமாக இருக்கலாம்.
ரன்பீர் கபூர் : இளம் நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், ரூ.36 கோடி வரி செலுத்தி ஆறாவது இடத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால், இவரது வரித் தொகை அதிகரித்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன் : குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன், ரூ.42 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.
கபில் ஷர்மா : பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா, ரூ.26 கோடி வருமான வரி செலுத்தி எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கான வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
கரீனா கபூர் : இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே நடிகை கரீனா கபூர். இவர் ரூ.20 கோடி வருமான வரி செலுத்தி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி, விளம்பரங்கள் மூலமும் இவர் அதிக வருமானம் ஈட்டி வருகிறார்.
ஷாஹித் கபூர் : பட்டியலில் 10-வது இடத்தில் நடிகர் ஷாஹித் கபூர் உள்ளார். இவர் நடப்பு நிதியாண்டில் ரூ.14 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். இவரது படங்கள் மற்றும் விளம்பர வருமானம் ஆகியவை இந்த தொகைக்கு காரணமாக இருக்கலாம்.
Read More : திரையுலகமே சோகம்..!! ICU-வில் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்..!! என்ன ஆச்சு..?



