ஆடி முதல் வெள்ளிக்கிழமை!. இதை நைவேத்தியமாக படைத்தால் அம்பாள் வீடு தேடி வருவாள்!. நினைத்த காரியம் நிறைவேற இப்படி வழிபடுங்கள்!

aadi first friday 11zon

ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், ஆடி முதல் வெள்ளி அன்று முப்பெறு தேவர்களையும், சப்த கன்னியர்களையும், குலதெய்வங்களில் இருக்கும் பெண் தெய்வங்களையும் வழிபடுவது மிகவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அம்மனை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமாக கருதப்படுவது வெள்ளி விநாயகர் விரதம். இந்த விநாயகர் விரதம் குறையாத செல்வத்தை அருளும் என்பது ஐதீகம்.


ஆடி வெள்ளியில் விரதம் இருப்பதை நிறைய பெண்கள் கடைபிடிப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருக்கையில் முதலில் விநாயகரை வழிபட வேண்டும். இங்கு வெள்ளி என்பது கிழமையை குறிப்பதே தவிர, வெள்ளியால் செய்யப்பட்ட பிள்ளையாரை அல்ல. எனவே வெள்ளிக்கிழமைகளில் பெண்கள், வீட்டிலுள்ள விநாயகருக்கு காலையில் அருகம்புல்லால் பூஜை செய்வது விசேஷம். காலையில் முடியாதவர்கள் மாலை வேளையில் விநாயகருக்கு அருகம்புல்லால் பூஜை செய்து, பின் அம்பாளை வழிபடலாம்.

ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபட்டு வந்தால் நம்மை சுற்றியுள்ள அனைத்து தீங்கும் விலகும். ஆரோக்கியம், செல்வம், ஞானம் போன்றவை கிடைக்கும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மட்டுமே. கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவேளை உங்களால் எல்லா வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால், ஒரு வெள்ளிக்கிழமையாவது கண்டிப்பாக வழிபாடு செய்யுங்கள்.

இந்நன்னாளில் வீட்டின் பூஜை அறையில் அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து, விளக்குக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. திருவிளக்கில் லட்சுமி, சரஸ்வதி, பராசக்தி, சிவ பெருமான், பிரம்மா, மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் ஆடி முதல் வெள்ளியில் திருவிளக்கு பூஜை செய்வதால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் நமக்கு கிடைத்துவிடும்.

இந்த நாளில் அம்மனுக்கு மனம் குளிரும் படி வழிபட வேண்டும். அம்மனுக்கு செய்யப்படும் வழிபாடுகள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியமானது அம்மனுக்கு படைக்கும் நைவேத்தியங்கள். அம்மனுக்கு விருப்பமான நைவேத்தியங்கள் படைத்து வழிபட்டால், அம்மனே நம்முடைய வீடு தேடி வந்து, நம்முடைய பூஜையில் எழுந்தருளி, அருளாசி வழங்குவாள் என்பது நம்பிக்கை.

அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல், வடை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். வீட்டிற்கு இரண்டு சுமங்கலிகளையாவது அழைத்து மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்க வேண்டும். அதே போல் கன்னிப் பெருண்களையும் அழைத்து வளையல், கண்ணாடி, கண் மை, சீப்பு போன்ற மங்கல் பொருட்களை வழங்க வேண்டும். இப்படி கொடுப்பதால் உங்களின் பூஜைக்கு மனம் மகிழ்ந்து ஏதாவது ஒரு சுமங்கலி அல்லது கன்னிப் பெண் வடிவில் அம்பாள் உங்களின் வீட்டிற்கு வந்து, நீங்கள் தரும் மங்கலப் பொருட்களை பெற்றுக் கொள்வாள். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்குவதே புண்ணியம் என்பார்கள்.

தடைகள், எதிர்மறை ஆற்றல்கள், கனவு தொந்தரவுகள் போன்றவற்றை போக்க, ஆடி வெள்ளியில் கருமாரியம்மன் மற்றும் புற்று வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்குமாம். அம்மனை மனதார வேண்டிக்கொண்டு ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, வீட்டிலேயோ அல்லது ஆலயத்திலோ நெய் விளக்கேற்றி பூஜை செய்யலாம். மேலும் ஆடி வெள்ளியில் ஒரு பெண் பிள்ளைக்கு தாம்பூலம், உணவு, ஆடை என்று நம்மால் முடிந்த பொருட்களை வெற்றிலை பாக்கு வைத்து கொடுப்பது சிறந்தது.

Readmore: செஸ் ஜாம்பவான் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா.. ப்ரீஸ்டைல் செஸ் தொடரில் அசத்தல்..!!

KOKILA

Next Post

அமர்ந்த நிலையில் காட்சி தரும் அபூர்வ கிருஷ்ணர்.. 108 திவ்யதேசங்களில் 48-வது புனிதத்தலம்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Fri Jul 18 , 2025
திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது. இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]
Pandavathoothar 7

You May Like