ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி!… 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.


இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடந்து பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடியது. இதில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 5ஆம் நாள் ஆட்டத்தில், ஆரம்பம் முதலே மழை பெய்து வந்த நிலையில் போட்டி டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை நின்று மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இதில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 174 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கவாஜா மற்றும் ஸ்காட் போலண்ட் இருவரும் இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இதில், போலண்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். ஹெட் 16 ரன்கள் எடுத்திருந்த போது மொயீன் அலி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு கேமரூன் க்ரீன் களமிறங்கினார். ஒரு புறம் நிதானமாக ஆடிய கவாஜா அரைசதம் அடித்தார். அவர் அரைசதம் அடித்ததை தொடர்ந்து க்ரீன் 28 பந்துகளில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கவாஜா 65 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கூட ஆஸி, வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் அலெக்ஸ் கேரியும் 20 ரன்களில் ரூட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் களமிறங்கினார். அவர் தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து கடைசி வரை நின்று ஆடி ஆஸி, அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இறுதியாக பேட் கம்மின்ஸ் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

KOKILA

Next Post

தூள்...! பெண்களுக்கு இலவச சேவை...! இரவு 10 முதல் மாலை 6 மணி வரை...! டிஜிபி அதிரடி உத்தரவு...!

Wed Jun 21 , 2023
தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெண்கள்‌ பாதுகாப்புக்கென புதிய திட்டம்‌ ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல்‌ காலை 6 மணி வரை தனியாக […]
IMG 20230621 051118

You May Like