கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. இதனிடையே தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்..
இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.. மேலும் கரூர் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளதால் விஜய் பாஜக பிடியில் சிக்கி உள்ளதாகவும், அவர் விரைவில் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கூறி வந்தனர்..
சமீபத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் தவெக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். எனவே அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லாது என்பது உறுதியானது..
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுகவினர் விஜய்யை வா வா என்று கூவி பார்த்தனர்.. 2026 தேர்தல் விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை எனில் திமுக தவெகவை அழித்துவிடும் என்று பயமுறுத்தி பார்த்தார்கள்.. சிரஞ்சீவி, பவன் கல்யாண் உதாரணங்களை எல்லாம் சொல்லி அவர்களை ஏமாற்ற பார்த்தார்கள்.. ஆனால் தவெக தங்களின் தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், சீ சீ.. இந்த பழம் புளிக்கும் என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்று பேசி வருகின்றனர்..
உண்மை என்றைக்கும் கசக்கத் தான் செய்யும்.. துரோகம் என்றைக்குமே அதன் வேலையை காட்டும்.. கிட்டத்தட்ட 53 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்த இயக்கம்.. அம்மா காலத்திலும் சரி எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி.. கூட்டணிக்காக மற்றவர்கள் அவர்களை தேடி வந்து பார்த்திருக்கின்றனர்.. இவர்கள் வாங்க வாங்க என்று கூவி கூவி அழைக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது.. இதை நாம் சொன்னால் நம் மீது கோபித்துக் கொள்கின்றனர்..” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்..!



