தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது..
எப்போதும் போலவே நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சீமான் இன்று வெளியிட்டார்.
நாதகவின் 2026 தேர்தல் வாக்குறுதிகள்
நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்
சென்னை – தொழில்நுட்ப தலைநகரம், திருச்சி – நிர்வாக தலைநகரம், கோவை – தொழில், வணிகத்தலைநகரம், மதுரை – மொழி, கலை மற்றும் குமரி – தமிழர் மெய்யியல் தலைநகரமாக உருவாக்கப்படும்
குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும், மக்களால் தேர்வு செய்யப்படாத எவரும் மக்களை ஆட்சி செய்ய அதிகாரமில்லை.
மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராகும் முறையை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர நாதக போராடும்
பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித்தொகுதியை போல் பெண்களுக்கு தனித்தொகுதி கிடைக்க நடவடிக்கை
மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி
நாதக ஆட்சிக்கு வந்தால் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்
மின்னணு வாக்குப்பதிவு முறையை நீக்கிவிட்டு, வாக்குச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும்
நன்கொடை ரசீது போல் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வாக்கு செலுத்தியவருக்கு அதற்கான ரசீது வழங்கப்படும்
நீதிமன்ற படிவங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை பெற்று தர ஏற்பாடு செய்யப்படும்.
உள்ளூரில் ஓடும் ரயில்களை மாநில அரசே நிர்வகிக்க சட்டம் கொண்டு வரப்படும்.
மாநில நீதிமன்றத்தில் அந்தந்த மாநிலத்தவர் தலைமை நீதிபதியாக சட்டம் கொண்டுவரப்படும்
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 75% கிடைக்க போராட்டம் நடத்தப்படும்
தமிழகத்தில் தமிழே, நீதிமன்ற மொழி, வழக்காடு மொழியாக இருக்க வேண்டும்
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும்
ஆற்றங்கரையோரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடையாது.
அனைத்து வீட்டிற்கும் அரசே இலவசமாக தண்ணீர் வழங்கும்
மாநிலம் முழுவதும் மணற்கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்கப்படும்.
அரசு வேலைகளில் பெண்களுக்கு சரிபாதி பங்கு அளிக்கப்படும்.
தூய தமிழ் மொழியில் மருத்துவ கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.
நாம் தமிழர் ஆட்சி அன்பான சர்வாதிகார ஆட்சியாக இருக்கும்.
ஆற்றங்கரையோரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடையாது.
கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பான தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும்.



