FLASH | 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..!! ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு..!! ராமநாதபுரத்தில் பெரும் சோகம்..!!

accident

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில், மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவில் நடந்த இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : இந்த முருகன் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாங்க..!! உங்க வாழ்க்கையே மாறும்..!! எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

டிச.24 முதல் 2026 ஜன.4-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை...!

Sat Dec 6 , 2025
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]
School students 2025

You May Like