கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட சதி என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கரூர் துயர சம்பவம் குறித்து நாளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்க உள்ளது. இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதை வலியுறுத்தி தவெக – வின் நிர்மல் குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாளை மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கை மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்கள். இப்போதைக்கு நாங்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. நாளை மதியம் விசாரணைக்குப் பிறகு எங்களுடைய கருத்தை நாங்கள் தெரிவிப்போம்” என்று பேசியுள்ளார்.
இதற்கிடையே கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை.. திட்டமிடப்பட்ட சதி என தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கற்கள் வீசப்பட்டதாகவும், வேண்டுமென்று உருவாக்கப்பட்ட கலவரம் என தவெக சார்பில் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.
Read more: உணவில் ஏன் பனீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்..? அதற்கான 6 காரணங்கள் இதோ…



