ஈரோட்டில் விஜய்யை பார்க்க சென்ற தொண்டருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அந்த வகையில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்..
அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த சரளைப் பகுதியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்திற்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான திடல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு நுழைவுச் சீட்டு (Pass) அல்லது கியூஆர் கோடு (QR Code) முறை பின்பற்றப்படும். ஆனால், இன்றைய கூட்டத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டதே கூட்டத்தின் அலைமோதலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, நள்ளிரவு 12 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் வரத் தொடங்கினர். கரூர் சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கு முதல் நிகழ்ச்சி என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோட்டில் விஜய்யை பார்க்க சென்ற தொண்டருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.. அருகில் இருந்தவர்கள் அவருக்கு இரும்புக் கம்பியை கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.. மேலும் அவருக்கு அங்கு நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.. சரளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..



