சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை காலை உயர்ந்துள்ளது… அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.12,440க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.99,520க்கு செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.224க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக ரூ. 2,24,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : ஈரோடு வரும் விஜய்க்கு செங்கோட்டையன் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!



