Flash : விஜய் காரை பின்தொடர்ந்து சென்ற போது அடுத்தடுத்து விபத்து..! தவெகவினர் காயம்..!

tvk vijay car

தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.


அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்..

இந்த நிலையில் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சைக்கு சென்றார்.. விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தவெக தொண்டர்கள் வழி நெடுகிலும் குவிந்தனர்.. அப்போது விஜய் காரை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்களின் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.. விஜய் காரை பின்தொடர்ந்த போது மற்றொரு வாகனம் மீது இரு சக்கர வாகனங்கள் மோதியதில் தொண்டர்கள் காயமடைந்தனர்.

RUPA

Next Post

“மற்றவர்களுக்கு தான் இது எலக்‌ஷன், எனக்கும் மக்களுக்கும் இது எமோஷன்..” விஜய் பேச்சு..!

Wed Mar 4 , 2026
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய விஜய் “ நான் வேலூரில் பேசும் போது தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று சொல்லி இருந்தேன்.. தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியா உண்மையாக பிரதிநிதியாக நான் மட்டும் தான் இருக்கிறேன் என்பதற்காக அதை தான் சொல்லி இருந்தேன்.. ஆனால் நான் […]
tvk vijay 3

You May Like